இந்தியாவில் அதிகமாக இருந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனை: ஜனவரி - மார்ச் காலாண்டில் 1.5% உயர்ந்த விற்பனை..!


Xiaomi போன்கள் 31.2%, விவோ 21%, சாம்சங் 15.6%, ரியல்மி 13.1% மற்றும் ஓப்போ போன்கள் 10.6% விற்பனையாகியுள்ளன.





இந்தியாவில் அதிகமாக இருந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனை: ஜனவரி - மார்ச் காலாண்டில் 1.5% உயர்ந்த விற்பனை..!





மாதிரிப்படம்




ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை 1.5% அதிகரித்துள்ளது.





இதே காலகட்டத்தில் முன்னணி நாடுகளான சீனாவின் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை 20.3 சதவிகிதமும், அமெரிக்காவின் விற்பனை 16 சதவிகிதமும் சரிந்துள்ளது.





கொரோனா வைரஸ் தாக்கமே இந்த விற்பனை சரிவிற்கு காரணம் ஆகும். இந்தியாவில் தற்போது முழு ஊரடங்கு உள்ளதால் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை சரிந்திருந்தாலும், அதன் பின்னர் விற்பனை சூடுபிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.





இதேபோல் ஆன்லைனில் ஸ்மார்ட்ஃபோன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் 9% உயர்ந்துள்ளது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. Xiaomi போன்கள் 31.2%, விவோ 21%, சாம்சங் 15.6%, ரியல்மி 13.1% மற்றும் ஓப்போ போன்கள் 10.6% விற்பனையாகியுள்ளன.


Comments