ஆண்களே... பொடுகுத் தொல்லையால் அவஸ்தையா..? இந்த 6 எளிய வழிகளை பின்பற்றலாம்..!


சைனஸ், நீர்கோர்ப்பு உள்ளிட்ட பிரச்ச்சனைகள் இருப்பின் இக்குறிப்புகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றலாம்.


ஆண்களே... பொடுகுத் தொல்லையால் அவஸ்தையா..? இந்த 6 எளிய வழிகளை பின்பற்றலாம்..!



பொடுகுத் தொல்லை

வறண்ட தலைமுடி வேர்களின் பக்குகள் பிரிந்து வருவதே பொடுகு. இது ஈரப்பதமின்மை, தொற்று , அழுக்கு போன்ற காரணங்களால் உண்டாகலாம். பொடுகுத்தொல்லை ஒழிய இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.


எலுமிச்சை : எலுமிச்சையை தோலோடு சாறு பிழிந்து வேர்களில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் ஊற வைத்து தலைக்குக் குளியுங்கள்.


தேன் : தேனில் கொஞ்சம் பூண்டுகளை தட்டிப் போட்டு ஊற வைத்து அதை வேர்களில் தடவி தலைக்குக் குளித்தால் பலன் கிடைக்கும்.


தேயிலை எண்ணெய் : தேயிலை எண்ணெயும் பொடுகை நீக்க உதவும். தேயிலை எண்ணெயில் மசாஜ் செய்து ஊற வைத்துக் குளியுங்கள்.



தயிர் : தயிருடன், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோட மற்றும் கசக்கிய புதினா இலைகளை போட்டு நன்குக் கலந்து அந்த பேஸ்டை வேர்களில் மாஸ்க் போல் தடவி 15 நிமிடங்கள் காய வைத்து தலைக்குக் குளியுங்கள்.


சின்ன வெங்காயம் : சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம்.


கற்றாழை : கற்றாழை ஜெல்லை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்கலாம்.


குறிப்பு : நீர் கோர்த்தல், சைனஸ், தைராய்டு போன்ற பிரச்னைகள் இருப்போர் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகுதான் இவற்றைச் செய்யவேண்டும். அதேபோல் மேலே குறிப்பிட்ட குறிப்புகளை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர பலன் தெரியும்.


Comments