’ஸ்டவ் பர்னர்’ புதிது போல் பளபளக்க வேண்டுமா..? இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..!


வீட்டில் பலரும் கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்யும் போது பர்னரை சுத்தம் செய்யத் தவறலாம். ஆனால் பர்னர் பராமரிப்பும் அவசியமானது.





’ஸ்டவ் பர்னர்’ புதிது போல் பளபளக்க வேண்டுமா..? இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..!





ஸ்டவ் பர்னர்




வீட்டில் அடுப்பு இன்றியமையாத ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. அதை சுத்தமாகவும், அடிக்கடி பராமரிப்பதும்தான் அதன் ஆயுளை நீட்டிக்க முடியும்.





வீட்டில் பலரும் கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்யும் போது பர்னரை சுத்தம் செய்யத் தவறலாம். ஆனால் பர்னர் பராமரிப்பும் அவசியமானது. அதுதான் சிலிண்டரிலிருந்து வெளியேறும் கியாஸை தீயாக வெளியேற்றுகிறது. அதில் ஏதேனும் அடைப்பு இருந்தாலும் கியாஸ் சீராக வெளியேற முடியாமல் விபத்துகளும் நிகழலாம். அதேபோல் ஸ்டவ் பளபளவென இருந்தாலும் பர்னர் கருகி பழையதுபோல் தோற்றமளிக்கும். அதுவும் பராமரிப்பின்மையின் அறிகுறியே.





இனியும் அப்படி விடாமல் உங்கள் ஸ்டவ் பர்னரும் புதிது போல் பளபளக்க இதோடிப்ஸ்..!





தேவையான பொருட்கள் :





கருப்பு புளி
அகலமான கிண்ணம்தண்ணீர்









செய்முறை :





பகல் முழுவதும் புளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.





தூங்கும் முன் புளியை நன்கு கரைத்துக்கொண்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக்கொள்ளுங்கள்.





அந்த தண்ணீரில் பர்னர்களை மூழ்கும்படி ஊற வைத்துக்கொள்ளுங்கள்.





இரவு முழுவதும் ஊற விடுங்கள்.





மறுநாள் எழுந்ததும் அதை எடுத்துப்பார்த்தாலே சற்று பளபளப்பாகத் தெரியும். பின் கம்பி நார் கொண்டு சபீனா அல்லது சோப்பில் தொட்டு நன்குத் தேய்க்க மீதம் இருக்கும் கருமையும் நீங்கி புதிதுபோல் ஜொலிக்கும்.





பின் அதை வெயில் அல்லது காற்று படும்படி நன்கு காய வைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக பர்னர் கிளீனிங் ஸ்டிக் அல்லது மெல்லிய குச்சி கொண்டு ஓட்டைகளில் அடைப்புகளில்லாமல் ஒவ்வொரு ஓட்டையால குச்சியை குத்தி எடுங்கள். இப்படி செய்வதால் பர்னர் தீ சீராக இருக்கும்.





இப்படி வாரம் ஒரு முறை தவறாமல் செய்து வந்தால் ஸ்டவ் பர்னர் நீண்ட நாள் உழைக்கும்.


Comments