அந்நியர்கள் உங்கள் வாட்ஸ்அப் குழுக்களில் நுழைய வாய்ப்பு உள்ளது!- தவிர்ப்பது எப்படி?


உங்கள் வாட்ஸ்அப் குழுவுக்கே சம்பந்தம் இல்லாத ஒருத்தரால் உங்களது குழு உரையாடல்களை கவனிக்க முடியுமா? நிச்சயமாக முடியும்.









உங்கள் வாட்ஸ்அப் குழுவுக்கே சம்பந்தம் இல்லாத ஒருத்தரால் உங்களது குழு உரையாடல்களை கவனிக்க முடியுமா? நிச்சயமாக முடியும்.




வாட்ஸ்அப் செயலியில் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் ஒன்றிணைந்து சாட் செய்வதற்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் வாட்ஸ்அப் க்ரூப் என்னும் ஆப்ஷன் மிகுந்த பயனுள்ளதாய் உள்ளது.





ஆனால், உங்கள் வாட்ஸ்அப் குழுவுக்கே சம்பந்தம் இல்லாத ஒருத்தரால் உங்களது குழு உரையாடல்களை கவனிக்க முடியுமா? நிச்சயமாக முடியும். காரணம், வாட்ஸ்அப் செயலியில் உள்ள ‘Invite to Group via Link’ என்னும் ஆப்ஷன்தான். இந்த ஆப்ஷனை வாட்ஸ்அப் பயனாளர்கள் கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும்.





‘Invite to Group via Link’ என்னும் ஆப்ஷனைப் பயன்படுத்தும் போது கூகுள் மூலமாகவே சில பல கீவேர்டுகளைப் பயன்படுத்தியே ஒரு குழுவுக்குள் நடக்கும் உரையாடல்கள், மொபைல் எண்கள் ஆகியவற்றை சம்பந்தமே இல்லாத ஒருவரால் கண்காணிக்க முடியும். காரணம், ‘Invite to Group via Link’ என்னும் ஆப்ஷனை உங்களுக்கு மிகவும் தெரிந்த ஒருவருக்கு நீங்கள் நேரடியாக அனுப்பலாம்.





அந்த நண்பரும் உங்கள் அழைப்பை ஏற்று அந்த வாட்ஸ்அப் குழுவில் இணையலாம். ஆனால், இந்த வாட்ஸ்அப் குழுவில் இணைய என பொதுவாக ஒரு தளத்தில் ‘Invite to Group via Link’ என்னும் ஆப்ஷனை நீங்கள் வெளியிட்டால் அது உங்களுக்கு மட்டுமல்லாது உங்களது வாட்ஸ்அப் தொடர்புகள் அனைவருக்கும் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.





உங்களது சுய விவரங்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்படும். ஆகவே, நீங்கள் ‘Invite to Group via Link’ என்னும் லிங்க்-ஐ பொதுவெளியில் பயன்படுத்தினால் உடனடியாக க்ரூப் அட்மின் தனது குழுவின் லிங்க்-ஐ அப்க்ரேட் செய்வது சற்று பாதுகாப்பை உறுதி செய்யும்.


Comments