தினமும் உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்பு சக்தியின் வேகம் அதிகரிக்குமா..?


ஆய்வு விளக்கம்





நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் வைரஸ் தொற்று, கிருமி தொற்றுகள் என எதுவும் அண்ட விடாமல் உடல் அதோடு போராட உதவும்.





உடற்பயிற்சி




உடற்பயிற்சி என்பது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்குமானதுதான் என்பதை நிரூபிக்கவே இந்த ஆய்வு.





சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் தினசரி உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியின் செயலைத் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது.





சர்வதேச உடற்பயிற்சி மற்றும் நோய் எதிர்ப்பு ஆய்வு இதழ் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் இனைந்த்து கடந்த 100 ஆண்டுகளைக் கணக்கிட்டு உடற்பயிற்சி மனித உடலை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என ஆய்வு நடத்தியுள்ளது.





அதில் மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் வயது அதிகரிக்க அதிகரிக்க தன் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளும் உறுப்புகள் புத்துணர்ச்சியோடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியின் வேகம் அதிகரிப்பதும், இதனால் வயது அதிகரித்தால் அதன் வேகம் குறையாது என கண்டறியப்பட்டுள்ளது.









நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் வைரஸ் தொற்று, கிருமி தொற்றுகள் என எதுவும் அண்ட விடாமல் உடல் அதோடு போராட உதவும்.உடற்பயிற்சி செய்தால் தொற்று பாதிப்பு உண்டாவது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது என்று ஆய்வின் தலைவர் கூறுகிறார்.





எனவே இதுபோன்ற கொரோனா தொற்று சமயத்தில் உடற்பயிற்சி செய்தால் நோய் தொற்றுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். அதோடு ஆரோக்கியமான உணவு முறையும் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை.


Comments