மன அமைதிக்கு தியானம் செய்ய போதுமான சூழல் அமையவில்லையா..? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்..!


குறைந்தது தினம் அரை மணி நேரமாவது தியானத்திற்காக ஒதுக்க சொல்லி மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.





மன அமைதிக்கு தியானம் செய்ய போதுமான சூழல் அமையவில்லையா..? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்..!





தியானம்




தியானம் செய்வதை பலரும் மனதை ஒருநிலைப்ப்படுத்தி கவனச் சிதறல்களை தவிர்க்கச் செய்வதற்கான பயிற்சி என நினைக்கின்றனர். ஆனால் அது உடலுக்கான ஆழ்ந்த அமைதி, ஓய்வு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே உங்கள் உடல் ஆழ்ந்த ஓய்வுக்குச் செல்லும் போது மனம் தானாக அமைதி வழிச் செல்கிறது. எனவேதான் குறைந்தது தினம் அரை மணி நேரமாவது தியானத்திற்காக ஒதுக்க சொல்லி மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.





தியானம் செய்வதற்கான போதுமான சூழல் அமையாதோர் இந்த டிப்ஸை பின்பற்றலாம்.





முதல் முறையாக தியானத்தில் ஈடுபடுவோர் 2 நிமிடங்களுக்கு கைகளை வேகமாக அசைத்து பின் தியானத்தில் அமரலாம் அல்லது ஜாகிங் செய்துவிட்டும் தியானம் செய்தால் மூச்சுப் பயிற்சியும் , உடல் ஓய்வும் கிடைக்கும்.





தியானம் செய்யும் முன் பிரணாயாமம் அல்லது சில யோகாசனங்களை செய்துவிட்டு தியானத்தில் ஈடுபடலாம்.









குறைந்தது 10 - 15 முறை மூச்சை நன்கு இழுத்து வெளியேற்றுங்கள். மூச்சை மூக்கு வழியாக உள்ளிழுத்து வாய் வழியாக வெளியிடுங்கள். இதனால் உடல் அமைதி நிலையை அடையும்.இப்படி தினமும் அரை மணி நேரம் தியானத்திற்காக ஒதுக்கினால் நம்முடைய எமோஷ்னல் ஹெல்த் அதிகரிக்கும் என பையோலாஜிகல் சைக்கேட்ரி பெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.


Comments