கோடை வெப்பத்தால் உடல் முழுவதும் வேர்க்குரு வந்துவிட்டதா..? குணமாக்கும் இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!


உப்பு நீர் சுரப்பு வெளியேறுவது தடைபடும்போது அவை வியர்வைக் கட்டிகளாக வெளிப்படுகின்றன.





கோடை வெப்பத்தால் உடல் முழுவதும் வேர்க்குரு வந்துவிட்டதா..? குணமாக்கும் இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!





வேர்க்குரு

வெயில் காலத்தில் அதிகமாக சுரக்கும் உப்பு நீரையே வியர்வை என்கிறோம். இது உடலில் தேங்கும் உப்பு அதிகரிக்கும்போது, நீராக வெளியேறும். இந்த உப்பு நீர் சுரப்பு வெளியேறுவது தடைபடும்போதுதான் அவை வியர்வைக் கட்டிகளாக வெளிப்படுகின்றன. இதையே நாம் வேர்க்குரு என்கிறோம்.


இது பயப்படக்கூடியது இல்லை என்றாலும் கண்டுகொள்ளாமல் விடுவதும் ஆபத்து. எனவே இந்த வீட்டுக்குறிப்புகளை பின்பற்று வேர்க்குருவை விரட்டுங்கள்.





வேர்க்குருவை விரட்ட வீடுகளில் காலாகாலமாக பயன்படுத்துவது சந்தனம். இது குளுமை என்பதால் சந்தனத்துடன் கொஞ்சம் மஞ்சளும் தண்ணீருக்கு பதில் ரோஸ் வாட்டரும் கலந்து உடம்பு, கழுத்து என தடவலாம்.





முல்தானி மெட்டியும் வேர்க்குருவை விரட்ட உதவும். அதிலும் ரோஸ் வாட்டர் கலந்து தடவலாம்.





பருத்தித் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடலில் போர்த்திக் கொள்ளுங்கள். ஈரம் காயும் வரை எடுக்காதீர்கள். இவ்வாறு செய்து வந்தாலும் வேர்க்குரு நீங்கும்.





வெயில் கால பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு , இளநீர், கிர்ணி பழம் , கரும்பு ஜூஸ் போன்றவை நிறைய குடிக்கலாம். நுங்கு சாறை உடலில் தடவினாலும் வேர்க்குரு நீங்கும்.





கற்றாழை ஜெல்லையும் குழைத்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்க்கலாம்.





வேர்க்குரு இருக்கும் சமயத்தில் பருத்தி துணிகளை அணியுங்கள். இருக்கமாக இல்லாமல் காற்றோட்டமாக உள்ள ஆடையாக இருக்க வேண்டும்.


Comments