மளிகைப் பொருட்கள் , காய்கறிகளில் வைரஸ் பரவுமா..?
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு ஒரு நபர் மட்டும் அரசு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம். இந்த நேரத்தில் வெளியே சென்று பொருட்களை வாங்கி வரும் பலருக்கும் இருக்கும் கேள்வி அத்தியாவசியப் பொருட்களில் கொரோனா வைரஸ் இருக்காதா? என்பதுதான்..!
உண்மை என்னவெனில் இதுவரை அப்படி ஏதும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் உலக சுகாதார அமைப்பு சில பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது.
New England Journal of Medicine நடத்திய ஆய்வில் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பாத்திரங்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 72 மணி நேரம் வரை வைரஸ் உயிர் வாழுமாம். அதுமட்டுமன்றி பேக்கிங் செய்யப்படும் அட்டைபெட்டிகளில் 24 மணி நேரத்திற்கு வைரஸ் உயிர் வாழும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே மளிகைக் கடைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்கள் அவற்றை பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.அதாவது அட்டைப் பெட்டிகளை தொடும் முன் கிளவுஸ் அணிந்து ஈரப்பதம் மிக்க வைப்ஸ் கொண்டு துடைத்துவிடுங்கள் அல்லது தொட்டவுடன் கைகளைக் எங்கும் தொடாமல் உடனே கழுவிவிடுங்கள் என்று கூறியுள்ளது.
வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்கி வந்தாலும் உடனே கைகளை கழுவுதல் அவசியம். தூக்கி எறிய முடிந்த அட்டை மற்றும் கவர்களையே வெளியிலேயே எறிந்துவிடலாம்.
கழுவ முடிந்த மளிகைப் பொருட்களை கழுவி எடுத்துவைக்கலாம். மளிகை பொருட்கள் வைக்கும் இடத்தையும் நன்கு சுத்தம் செய்துவிட்டு வைக்கவும்.
மளிகைப் பொருட்கள் வாங்கி வரும் பையை உடனே துவைத்து அலசுவது நல்லது. பிளாஸ்டிக் கவர் என்றால் எறிந்துவிடலாம்.
வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 72 மணி நேரம் வெளியே வைத்துவிட்டு பின்னர் எடுத்துக்கொள்ளலாம்.
காய்கறி பழங்களை வெளியிலேயே நன்கு தண்ணீரில் அலசிவிட்டு உள்ளே எடுத்துச் செல்லலாம். 15 நிமிடங்களுக்கு அவை அப்படியே தண்ணீரிலேயே ஊற வைத்தலும் நல்லது.
Comments
Post a Comment