"'கொரோனா வைரஸ் செய்திகளை சொல்' என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது"
ஆப்பிள் நிறுவனம் தனது அலைபேசிகளில் உள்ள சிரி என்ற குரல் உதவி செயலியில் கொரோனா தொடர்பான ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது.
இது பயனாளர்களுக்கு கொரோனா தொடர்பான சமீபத்திய தகவல்களை அவ்வப்போது வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல்களைப் பெற 'சிரி'யிடம் "கொரோனா வைரஸ் செய்திகளை சொல் என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று அஞ்சும் பயனாளர்களுக்கு உதவும் வகையில், செய்திகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தகவல்களுடன் சிரி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment