முதன்முறை பள்ளிக்குச் செல்லப் போகும் உங்கள் குழந்தையை எப்படி தயார்ப்படுத்துவது..?


இத்தனை நாட்கள் வீட்டில் உங்களின் அரவணைப்பில் இருந்த குழந்தை சமூகத்தை எதிர்கொள்ள வைக்கும் முதல் அடி இதுதான்.


முதன்முறை பள்ளிக்குச் செல்லப் போகும் உங்கள் குழந்தையை எப்படி தயார்ப்படுத்துவது..?


பள்ளிக்குச் செல்லப் போகும் உங்கள் குழந்தையை எப்படி தயார் செய்வது..?

குழந்தைகளின் ஆரம்பக் கல்வி என்பது மிக முக்கியமான தருணம். மூன்று வயதை எட்டிய குழந்தைகளை எல்.கே.ஜி சேர்க்கும் பெற்றோர்கள் நிச்சயம் அவர்களுக்கு இந்த மாற்றத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல் அவசியம். இத்தனை நாட்கள் வீட்டில் உங்களின் அரவணைப்பில் இருந்த குழந்தை சமூகத்தை எதிர்கொள்ள வைக்கும் முதல் அடி இதுதான். எனவே அதற்கு உங்கள் குழந்தையை தயார்படுத்துங்கள்.


குழந்தை பள்ளிக்குச் செல்லும் வயதை எட்டியதும் அவர்களுக்கு பள்ளி என்பது எப்படி இருக்கும். என்ன மாதிரியான சவால்கள் இருக்கும் என்பதை அவர்களிடம் பேசும்போதும் அவர்கள் விளையாடும்போதும் எடுத்துரைக்கலாம்.


பள்ளி செல்லும் முன்னரே அவர்களுக்கு கலரிங் பாக்ஸ், ஸ்டேஷ்னரி பொருட்கள், வாட்டர் பாட்டில், பேக் , கலரிங் புத்தகங்கள் என ஷாப்பிங் கூட்டிச் சென்று வாங்கிக்கொடுங்கள். இது அவர்களுக்கு பள்ளிக்கு செல்லும் ஆர்வத்தைத் தூண்டலாம்.


உங்களை விட்டுப் பிரிந்தால் அதை ஏற்கும் பக்குவத்தை குழந்தைக்கு அளிக்க வேண்டும். அதற்கு முன்னரே பிளே ஸ்கூல் அல்லது அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்கலாம். இது அவர்களுக்கு சிறப்பான முன் அனுபவமாக இருக்கும்.


தினசரி பழக்க வழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வருதல் அவசியம். அதாவது பள்ளிக்குச் செல்ல காலையில் சீக்கிரம் எழுதல் , தானே சாப்பிடுதல், இயற்கை உபாதைகள் கழித்தல் போன்ற விஷயங்களுக்கு அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். அதை இப்போதிலிருந்தே அவர்களுக்கு தொடங்குங்கள்.



ஒழுக்கங்களைக் கற்றுத்தருதலும் அவசியம். ஒழுக்கத்தைக் பள்ளியில் அல்ல வீட்டிலிருந்துதான் முதலில் துவங்க வேண்டும். எனவே பேசுதல், மரியாதை, சொல் பேச்சு கேளுதல், பகிர்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற ஒழுக்கங்களை கற்றுத் தருதல் அவசியம். இந்தப் பழக்கங்கள் அவர்களை பள்ளியில் சிறந்த மாணவர்களாக உருவாக்கும்.


தினமும் வீட்டிலேயே அரை மணி நேரமாவது கற்றலுக்கான நேரம் ஒதுக்க வேண்டும். இதனால் பள்ளியில் ஆசிரியர் இப்படித்தான் கற்றுத் தருவார்கள் என புரிய வைக்க உதவும். இதனால் அவர்களின் கவனித்தல் திறனும் உருவாகும். இது உங்கள் குழந்தைக்கு கற்றுத்தரப் போகும் ஆசிரியருக்கு சிறந்த உதவியாகவும் இருக்கும்.


Comments