ஜியோ எண்ணுக்கு அழகான பாடல்களை காலர் டியூனாக வைப்பது எப்படி? எளிமையான வழிகள்
நமக்கு அழைக்கும் நபருக்கும் வெறுமனே ட்ரிங் ட்ரிங் ஒலி கேட்காமல், அவர்களை சந்தோசப்படுத்தும் பாடல்களால் நனைவைத்தால் எவ்வளவு இன்பம்... உங்கள் ஜியோ எண்ணுக்கு எப்படி காலர்டியூன் வைப்படி என்பதை பார்ப்போம்.
நீங்கள் வேறு யாருக்காவது அழைக்கும்போது ஒலிக்கும் காலர்டியூனை உங்கள் எண்ணுக்கும் வைக்க விரும்பினால், அந்த எண்ணுக்கு அழைக்கும்போதே * ஐ அழுத்தவும். உடனே உறுதி செய்வதற்கான எஸ்.எம்.எஸ். வரும். அதற்கு Y என்று பதில் அளித்தால் காலர் டியூச் ஆக்டிவேட் ஆகிவிடும்.
எஸ்.எம்.எஸ். முறையில் காலர் டியூன் வைக்க, JT என்று டைப் செய்து 56789 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யவும்.. பின்னர் வரும் தெரிவுகளில் இருந்து உங்களுக்கு தேவையான பாடலை பதிலாக அனுப்பி காலர்ட்யூன் செட் செய்து கொள்ளலாம்
JioSaavn ஆப் மூலமாகவும், காலர் டியூன் செட் செய்யலாம். ஏதேனும் பாடலை தேர்வு செய்து அதில் Set as JioTune என்பதை கிளிக் செய்து செட் செய்துகொள்ளலாம்
MyJio ஆப்பில் JioTunes என்ற மெனுவை தேர்வு செய்து அதில் தோன்றும் பாடல்களை தேர்ந்தெடுப்பதன்மூலம் காலர் டியூன் செட் செய்யலாம்
Comments
Post a Comment