கலந்ததும் ஸ்பாஞ்ச் கொண்டு கறைகள் உள்ள இடத்தில் தடவுங்கள். 5 நிமிடங்கள் காயவிடுங்கள்.
பாத்ரூம் டைல்ஸ் கறைகள்
பாத்ரூம் டைல்ஸ் கறை எப்படி தேய்த்தாலும், எதை ஊற்றி தேய்த்தாலும் போகவில்லையே என புலம்புவோருக்காகவே இந்த டிப்ஸ்..!
தேவையான பொருட்கள் :
பேக்கிங் சோடா
பிரஷ்
வினிகர்
ஸ்பாஞ்ச்
செய்முறை :
சமையலுக்கு பயன்படுத்தும் வினிகருடன் , பேக்கிங் சோடாவைக் கலந்துகொள்ளுங்கள். சற்று தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.
கலந்ததும் ஸ்பாஞ்ச் கொண்டு கறைகள் உள்ள இடத்தில் தடவுங்கள். 5 நிமிடங்கள் காயவிடுங்கள்.
தற்போது பிரஷ் கொண்டு நன்கு தேய்த்தால் கறைகள் வெளியேறுவதை உணரலாம்.
இறுதியாக தண்ணீர் ஊற்றி கழுவிப் பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. பாத்ரூம் டைல்ஸ் கறைகள் நீங்கி புதிதுபோல் ஜொலிக்கும்.
Comments
Post a Comment