போதுமான தூக்கமின்மை எதிர்மறை சிந்தனைகளைத் தூண்டுமா..? என்ன சொல்கிறது ஆய்வு..!


மெல்லிய இசை, மெல்லிய வாசனை திரவியங்கள் போன்றவை அறையை சுற்றியிருந்தால் தூக்கத்தை தூண்டலாம்.





போதுமான தூக்கமின்மை எதிர்மறை சிந்தனைகளைத் தூண்டுமா..? என்ன சொல்கிறது ஆய்வு..!





தூக்கம்




சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் தூக்கத்தை கட்டுப்படுத்துகிறோம் அல்லது குறைத்துக்கொள்கிறோம் எனில் அது நம் உணர்ச்சி வெளிப்பாடுகளை பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.





Journal of Sleep Research வெளியிட்டுள்ள இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களின் வழக்கமான தொடர்ச்சியான தூக்கத்தை ஐந்து நாட்களும், தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்ட இரவுகள் ஐந்து நாட்கள் என கண்காணித்துள்ளது. அதில் அவர்களின் இரவுகளை படம் பிடித்ததில் தூக்கமின்மையான நாட்களில் அவர்களின் செயல்பாடுகள் எதிர்மறையாக இருந்ததை உணர முடிந்தது.





பின் பகலிலும் அவர்களை கண்காணித்து தீர்மானத்திற்கு வந்துள்ளனர். அதிலிருந்து அவர்களின் போதுமான தூக்கமின்மை எதிர்மறையான செயல்களைத் தூண்டுகிறது. எதிர்மறையான எண்ணங்களை அதிகரிக்கச் செய்கிறது என கண்டறிந்துள்ளது.





இந்த நவீன சமூகத்தில் தூக்கமின்மை இரவுகள் என்பது பலருக்கும் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஆனால் அது அவர்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை உணரவில்லை என ஆய்வின் தலைவர் கூறியுள்ளார்.





இந்த தூக்கமின்மை நேரம் என்பது அவர்களை அதிகமாக காஃபி அடிக்‌ஷனுக்கு தள்ளுகிறது. திரை நேரம் அதிகரிக்கிறது எனவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.





உங்கள் தூக்கமின்மை பிரச்னையை போக்க தூக்கத்தை தூண்ட வைப்பதே தீர்வு. அதற்கு என்ன செய்யலாம்..?





தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.





தினமும் தூங்குவதற்கான நேரத்தை வகுத்து அதை சரியாகக் கடைபிடியுங்கள். தூக்கம் வரவில்லை என்றாலும் படுங்கள். நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டாம்.





ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம். குறிப்பாக மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் போன்றவை பாசிடிவ் ஹார்மோன்களை சுரக்கச் செய்யும்.





தூங்கும் அறை, படுக்கை, மெத்தை என அனைத்தையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.





மெல்லிய இசை, மெல்லிய வாசனை திரவியங்கள் போன்றவை அறையை சுற்றியிருந்தால் தூக்கத்தை தூண்டலாம்.


Comments