வீட்டில் லேப்டாப்பில் வேலை பார்ப்பது பலருக்கும் புது அனுபவமாக இருக்கலாம்.
கண்கள் எரிச்சலாய் எரிகிறதா..?
வீட்டில் அலுவலக வேலை செய்வோர் பலர் லேப்டாப்பில்தான் வேலை பார்க்கக் கூடும். மேலும் வீட்டில் லேப்டாப்பில் வேலை பார்ப்பது பலருக்கும் புது அனுபவமாக இருக்கலாம். இந்த மாற்றம் கண்களுக்கு தொந்தரவு, எரிச்சல், சோர்வைத் தரலாம். இதை சரிசெய்ய இந்த விஷயங்களைப் பின்பற்றுங்கள்.
நீண்ட ஒரு மணி நேர வேலைக்குப் பிறகு 15-20 நிமிடங்கள் நேரம் ஒதுக்குங்கள். அப்போது எந்த திரைகளையும் பார்க்காமல் வேறேதேனும் ஒன்றைக் காணுங்கள். ஜன்னல் அல்லது பால்கனி வழியாக இயற்கையை பார்த்தல் நல்லது.
ஒதுக்கப்படும் நேரத்தில் செல்ஃபோன், டிவி பார்க்காதீர்கள். கண்களை மூடி இசை கேட்கலாம். மற்றவர்களுடன் பேசலாம்.
கண்ணாடி அணியும் பழக்கம் இருந்தால் அதை நன்கு துடைத்து பயன்படுத்துங்கள்.
கண்களில் கை வைப்பது, கசக்குவது என செய்யாதீர்கள்.உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது கண்களுக்கான இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
இருட்டு அறையில் , விளக்குகளை அனைத்துவிட்டு லேப்டாப்பில் வேலை செய்யாதீர்கள். குறிப்பாக இரவில் இதை செய்யாதீர்கள்.
படுத்துக்கொண்டும் லேப்டாப்பை பயன்படுத்தாதீர்கள்.
கண்களில் எரிச்சல், அரிப்பு, வீக்கம், வலி, கண்கள் சிவத்தல் போன்றவை இருந்தால் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
Comments
Post a Comment