கடலைமாவில் இப்படி ஃபேஸ் போக் போட்டால் பார்லரே போக வேண்டாம்.
கடலை மாவில் இப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போட்டால் முகம் ஜொலிக்கும்..!
கடலை மாவு நம் பாரம்பரிய அழகுக் குறிப்பு. அதில் சில பொருட்களையும் சேர்த்து ஃபேஸ் போக் போட்டால் பார்லரே போக வேண்டாம். முகம் பளபளக்கும்.
கடலை மாவும் , முட்டையும் : முட்டை வெள்ளை 1 , கடலை மாவு 2 tsp, தேன் 1/2 tsp என கலந்து முகத்தில் அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். இப்படி செய்தால் முகச்சுருக்கங்கள், வயது முதிர்ந்த தோல் தோற்றம் மறைந்து சதைகள் இறுக்கமாகும்.
கடலை மாவும் வேப்பிலையும் : வேப்பிலை பொடி 1 tsp, கடலை மாவு - 1 tsp, தயிர் 1 tsp என கலந்து முகத்தில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் இரண்டு முறை செய்தால் முகம் தெளிவாக இருக்கும். பருக்கள், கிருமிகள், எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற உதவும்.
கடலை மாவும் உருளைக்கிழங்கும் : கடலை மாவு 2 tsp, உருளைக்கிழங்கு 1 என எடுத்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை சாறு குறையாமல் மைய அரைத்துக்கொண்டு அதில் கடலைமாவு கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் ஜொலிக்கும். அதோடு கரும்புள்ளிகள், கருவலையங்களும் மறையும்.
கடலை மாவும் கற்றாழையும் : கடலை மாவு 1 tsp கற்றாழை 1 tsp என எடுத்துக்கொண்டு மைய கலந்து கொள்ளுங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது முகத்தில் உள்ள கருமையை நீக்க உதவும். ஈரப்பதம் அளிக்கும்.
கடலை மாவும் முல்தானி மெட்டியும் : 2 tsp முல்தானி மெட்டியும், 1 tsp கடலைமாவும் எடுத்துக்கொள்ளுங்கள் மைய கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்து வர இறந்த செல்கள், சரும அழுக்குகள் நீங்கும்.
Comments
Post a Comment