கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 9 வங்கிகள் UPI முறையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
மாதிரிப்படம்
க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லாமல் இந்தியர்களை அதிகம் கவர்ந்த பணப் பரிவர்த்தனை முறையாக UPI பணப் பரிவர்த்தனை முறை உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 10.8 பில்லியன் UPI பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது 2018-ம் ஆண்டைவிட 188 சதவிகிதம் அதிகமாம். இதுகுறித்து ஆய்வறிக்கையை Worldline India நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பேமன்ட் முறைகள் குறித்து இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் UPI பேமன்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இன்று டிஜிட்டல் பேமன்ட் முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் முறையாக UPI உள்ளது. 2019-ம் ஆண்டில் மட்டும் UPI மூலம் 18.36 ட்ரில்லியன் ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 9 வங்கிகள் UPI முறையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது UPI சேவை வழங்கும் வங்கிகளின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட Worldline நிறுவனம் ஐரோப்பியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment