கொரோனா அபாயம் : ஏ.சி பயன்படுத்தலாமா..?


குளிர்ச்சியான இடத்தில் வைரஸ் வளருமா.? தெரிந்துகொள்ள கிளிக் செய்க..!


கொரோனா வைரஸானது வெப்பநிலைக்கு ஏற்ப வளரும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.


கொரோனா வைரஸானது வெப்பநிலைக்கு ஏற்ப வளரும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.




வெயில் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பெரும்பாலானோர் வீடுகளில் ஏ.சி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சில வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது.





அதாவது ஏ.சி பயன்படுத்துவதால் குளிர்ச்சியான இடத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் என்ற வதந்தி பரப்படுகிறது. இந்த வதந்தி பரவக் காரணம் ஆரம்பத்தில் அதிக வெப்பநிலையில் கொரோனா வைரஸ் உயிர்வாழாது என்று பேசப்பட்டது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.





தற்போது வீட்டில் ஏசியே பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல முடியாது. அதேசமயம் ஆபத்து இல்லை என்றும் உறுதியாக சொல்ல முடியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது டிடி நேஷ்னலில் மருத்துவர் அபர்ணா அகர்வால் பேசிய போது “ ஏ.சி நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டும்.









அதேசமயம் வீட்டில் இருப்பவர்கள் தொற்று இல்லாமலும், சுகாதார வழிகளைப் பின்பற்றினால் ஏ.சி பயன்படுத்துவதில் ஆபத்து இல்லை. ஆனால் கொரோனா தொற்று இருப்பவர் அறையில் ஏசி பயன்படுத்தி அதில் மற்றவர்களும் இருந்தால் தொற்று பரவும். இந்த ஆபத்து அலுவலகம், கடைகளில் ஒரு கொரோனா தொற்று இருப்பவர் இருந்தாலும் நடுநிலையில் பயன்படுத்தக்கூடிய ஏ.சியினால் அதிக ஆபத்து உண்டு” என்று கூறினார்.





இதேபோல் நரம்பியல் நிபுணர் பத்மா ஸ்ரீவஸ்தவா ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில் “ வீட்டில் ஏ.சி பயன்படுத்துவது ஆபத்து இல்லை. இந்த வெப்பநிலை மே மாதம் இன்னும் அதிகரிக்கும். அப்போது கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறையலாம் என்று நம்பப்படுகிறது. பொருந்திருந்து பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.


Comments