இந்த காதல் இதயத்துக்குள் மட்டுமல்ல.. மூளைக்குள்ளையும் போய் என்ன செய்யுது தெரியுமா..?


காதல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் சக்தியும் மனிதனுக்கு உண்டாம். எப்படி தெரியுமா?





இந்த காதல் இதயத்துக்குள் மட்டுமல்ல.. மூளைக்குள்ளையும் போய் என்ன செய்யுது தெரியுமா..?


காதல்

காதல் வந்துவிட்டால் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும். அவர்கள் அருகில் இருந்தால் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது. இப்படியான அனுபவங்களை மனிதனாகப் பிறந்த அனைவரும் உணர்ந்திருக்கக் கூடும்.





இதுபோன்று தோன்ற என்ன காரணம்? அந்த காதல் உள்ளே சென்று என்ன செய்கிறது என்பன போன்ற கேள்விகளுடன் இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுநாள் வரை ஆராய்ச்சியாளர்களாலேயே காதலின் இயக்கவியலை அறியமுடியவில்லை.





இருப்பினும் ஓரளவு கண்டறிந்து மூளையின் செயல்பாடுகளை லண்டன் காலேஜ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளனர். அதில் ட்ரூலி, டீப்லி, மேட்லீ இன் லவ் என சொல்லிக்கொள்ளும் 21 -37 வயதுக்குட்பட்டவர்களை ஆய்வில் உட்படுத்தியுள்ளது.





அதில் காதலர்கள் இருவரை சந்திக்க வைத்து அவர்களின் மூளை செயல்பாடுகளை ஆராய்ந்து படம் பிடித்துள்ளது. அதில் ”அந்த பெண் காதலனிடம் 'ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை சொன்னவுடன் அந்த மூளையின் ஒட்டுமொத்த நரம்புகளும் செயல்படுவதைக் காண முடிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதோடு ஒட்டுமொத்த ஹார்மோன்களும் சுரக்கின்றன. இந்த செயல்பாடுகள் எங்களை பிரம்மிக்க வைத்தன” என்கிறார் பல்கலைக்கழக பேராசிரியர் சண்ட்ரா லங்கேஸ்லக்.





அதேபோல் காதலர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போது அவர்களின் மூளை செயல்பாடு அதிவிரைவாக இருக்கிறதாம். ஒவ்வொரு செயலுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும் டோபமைன் சுரக்கிறதாம்.


அதேசமயம் செரோடோனின் ஹார்மோன் சுரத்தல் குறைகிறதாம். அதேபோல் மூளையில் இருக்கும் அமிங்டாலா ( amygdala ) என்பது செயலிழக்கிறதாம். காரணம் இந்த இரண்டு செயல்பாடுகளும் தான் பயம் போன்ற உணர்வை உண்டாக்கக்கூடியதாம். இது காதலர்களுடன் இருக்கும்போது செயலிழப்பதால்தான் யாருக்கும் பயப்படுவதில்லை. எதையும் செய்ய துணிகிறோமாம். அதோடு பாதுகாப்பான உணர்வு வருவதற்கும் இதன் செயலிழத்தலே காரணம். அடுத்ததாக ஃபிரெண்டால் கோர்டெக்ஸ் என்பதும் செயலிழக்கிறது. இதுதான் காதலுக்கு கண் இல்லை என்ற வார்த்தைக்கு செயல்படுவது.


அதேபோல் இந்தக் காதல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் சக்தியும் மனிதனுக்கு உண்டாம். அது வெறும் சிம்பில் லாஜிக்தான். ஒருவரைப் பற்றி பாசிடிவாக நினைத்தால் காதல் அதிகரிக்கும். தொடர்ந்து நெகடிவாகவே நினைத்தால் காதல் குறையும் என சிம்பிலாக முடித்துள்ளனர்.


அதேபோல் காதல் காமம் இரண்டிற்கும் மூளை எப்படி செயல்படுகிறது என்ற கேள்விக்கும் விடை தேடுகையில் இரண்டும் ஒரே மாதிரிதான் செயல்படுகின்றன. அது அந்த நபரின் நோக்கத்தைப் பொறுத்தது. காதல் ஆழமாக இருந்தால் காமம் வெகுமதி..காமம் மட்டுமே குறிக்கோளாக இருந்தால் காதல் வெகுமதி என்று கூறி நிறைவு செய்யப்படுகிறது அந்த ஆய்வு.


Comments