வீட்டிலேயே இயற்கையான முறையில் ’ஹேர் டை’ செய்ய அருமையான டிப்ஸ்..!


இது இயற்கை வழி என்பதால், அமோனியா பேராபென் போன்ற ஆபத்து விளைவிக்கும் கெமிக்கல்கள் இல்லாதவை.





வீட்டிலேயே இயற்கையான முறையில் ’ஹேர் டை’ செய்ய அருமையான டிப்ஸ்..!





ஹேர் டை




கெமிக்கல் முறையிலான ஹேர் கலரிங் , ஹேர் டை என்பது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கு முடி உதிர்தல் பிரச்னையை உண்டாக்கலாம். ஆனால் இது இயற்கை வழி என்பதால் ஆபத்துகள் இல்லாதவை. வீட்டிலேயே ஹேர் டை செய்ய இதோ டிப்ஸ்.





கேரட் ஜூஸ் : 1 கப் கேரட் ஜூஸில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வீட்டில் ஆப்பில் சிடர் வினிகர் இருந்தால் அதில் தலையை அலசுங்கள். எதிர்பார்த்த நிறம் கிடைக்கவில்லை எனில் மீண்டும் வாரம் ஒருமுறை செய்யலாம்.





காஃபி பொடி : வறுத்த காஃபி கொட்டை ஒரு ஸ்பூன் மற்றும் காஃபி பொடி அரை ஸ்பூன் வீதம் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஹேர் கண்டிஷ்னர் ஒரு ஸ்பூன் கலந்து தலையில் அப்ளை செய்யலாம். ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளியுங்கள்.





பீட்ரூட் ஜூஸ் : 1 கப் பீட்ரூட் ஜூஸில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து அதை முடியில் தடவுங்கள். பின் ஷவர் கேப் கொண்டு தலையை மூடிவிடுங்கள். ஒருமணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கலாம்.





மருதாணி பொடி : மருதாணி அல்லது ஹென்னா பவுடரை அரை கப் எடுத்துக்கொண்டால் அதில் 1/4 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு கெட்டியான பதத்தில் கலந்து தலை முடியில் அப்ளை செய்து ஹேர் கேப் கொண்டு மூடிக்கொள்ளுங்கள். 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் கண்டிஷ்னர் பயன்படுத்தாமல் குளிக்க வேண்டும்.


Comments