இந்தியாவில் மட்டும் 400 மில்லியன் வாட்ஸ்அப் பயனாளர்கள் உள்ளார்களாம்.
இந்தியாவில் மட்டும் 400 மில்லியன் வாட்ஸ்அப் பயனாளர்கள் உள்ளார்களாம்.
வாட்ஸ்அப் பே சேவையை இந்தியாவில் வெளியிட தற்போது NPCI அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வாட்ஸ்அப் பே பயன்படுத்த விரும்பும் இந்தியர்கள் தாராளமாக இச்சேவையில் இணையலாம்.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது புதிய வாட்ஸ்அப் பே சேவையை அறிமுகம் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இந்திய அரசின் விதிமுறைகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப அனுமதி கிடைப்பதில் வாட்ஸ்அப் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வந்தது. ஆனால், தற்போது டிஜிட்டல் பேமன்ட் தளங்களுக்கான இந்திய விதிமுறைகளைப் பூர்த்தி செய்ததால் வாட்ஸ்அப் பே-க்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்தியாவில் அதிக வாட்ஸ்அப் பயனாளர்கள் இருப்பதாலே முதற்கட்டமாக வாட்ஸ்அப் பே சேவையை இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் மட்டும் 400 மில்லியன் வாட்ஸ்அப் பயனாளர்கள் உள்ளார்களாம். முதற்கட்டமாக இந்தியாவில் 10 மில்லியன் பயனாளர்கள் வாட்ஸ்அப் பே சேவையைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் பே என்னும் பேமன்ட் சேவையைப் பயன்படுத்த:
1. வாட்ஸ்அப் பக்கத்தில் உள்ள attachment பட்டனை க்ளிக் செய்யவும். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனாளர்கள் அதில் Payments என்னும் ஆப்ஷனைக் காணமுடியும்.
2. Payments ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். உங்களுக்கான terms and conditions கொடுக்கப்பட்டிருக்கும்.3. terms and conditions-க்கு agree கொடுத்த பின்னர் UPI பதிவுத்தளம் உங்களுக்குத் தெரியும். வழக்கமான UPI பேமன்ட் செயலிகளில் நீங்கள் செய்ய வேண்டிய நடைமுறைகள் செய்யவும்.
4. முதன்முறையாக உங்களுக்கான வங்கியை நீங்கள் தேர்வு செய்யும் ஆப்ஷனை வாட்ஸ்அப் பே வழங்குகிறது. அதன் பின்னர் உங்கள் மொபைல் எண் வேலிடேட் செய்யப்படும். அடுத்து உங்கள் UPI ID-யைத் தேர்ந்தெடுத்துப் பதியவும்.
5. இந்த நடைமுறைகளைப் பூர்த்தி செய்த பின்னர் நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் பே கணக்கின் மூலம் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு invite கொடுக்கலாம்.
Comments
Post a Comment