எதற்கெடுத்தாலும் சட்டென கோபப்படும் துணையுடன் வாழ்கிறீர்களா..? சமாளிக்க இதோ வழிகள்..


தேவையற்ற அவர்களின் டென்ஷன் உங்களையும் கோபத்திற்கு தூண்டிவிடும். மன உளைச்சளுக்கு ஆளாக்கும்.


எதற்கெடுத்தாலும் சட்டென கோபப்படும் துணையுடன் வாழ்கிறீர்களா..? சமாளிக்க இதோ வழிகள்..



கோபப்படும் துணையுடன் வாழ்கிறீர்களா..?

யோசிக்காமல் சட்டென கோபப்படுபவரை சமாளிப்பது சிரமம்தான். ஏனெனில் தேவையற்ற அவர்களின் டென்ஷன் உங்களையும் கோபத்திற்கு தூண்டிவிடும். மன உளைச்சளுக்கு ஆளாக்கும். இதற்கு என்ன செய்வது என சிந்திக்கும் நபர்களுக்காகவே இந்தக் கட்டுரை.


அமைதி : அவர்கள் கோபப்படும்போது உங்களை குளுமையாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் கத்தி முடித்தவுடன் அமைதியான பிறகு விஷயத்தை விளக்குங்கள். நீங்களும் சேர்ந்து கூச்சலிடுவது பயனற்றது.


மாறுதல் : எதற்காக அடிக்கடி சத்தம் போடுகிறார்கள், கோபப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.


அறிவுரை : வாழ்க்கை முழுவதும் இந்த சிக்கலை உங்களால் சமாளிக்க முடியாது என நினைத்தால் அவர்கள் அமைதியாக இருக்கும் நேரத்தில் அவர்களின் பிரச்னையை எடுத்து கூறுங்கள். இதனால் பாதிக்கப்ப்டுவது நீங்களும்தான் என்பதை புரிய வையுங்கள். அவர்களின் குறையை அவர்களுக்கே புரிய வையுங்கள்.



பயிற்சிகள் : இது அவர்களின் நிரந்தர குணம் அல்ல தற்காலிகப் பிரச்னை எனக் கருதினால் இதிலிருந்து வெளியேற அவர்களுக்கு உடற்பயிற்சி, தையல் பயிற்சி, விளையாட்டு, நீச்சல் பயிற்சி , ஓவியம் என அவர்களுக்கு பிடித்த பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கலாம். இந்த மாற்றம் அவர்களை மனதளவில் சாந்தப்படுத்தலாம்.


Comments