ஃபிரிட்ஜ் இல்லாமலேயே காய்கறி பழங்களை ஃப்ரெஷ்ஷாக வைத்துக்கொள்ள இந்த விஷயங்களை செய்யுங்க..!


பல நாட்களுக்கு வாங்கி வந்து ஃபிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடுவது பலனற்றது.



ஃபிரிட்ஜ் இல்லாமலேயே காய்கறி பழங்களை ஃப்ரெஷ்ஷாக வைத்துக்கொள்ள இந்த விஷயங்களை செய்யுங்க..!


காய்கறி பழங்களை ஃப்ரெஷாக வைத்துக்கொள்ள இந்த விஷயங்களை செய்யுங்க..!

காய்கறி , பழங்களை ஃபிரெஷாகவும், உடனே சமைத்து சாப்பிட்டால்தான் ஆரோக்கியம். அதை விடுத்து பல நாட்களுக்கு வாங்கி வந்து ஃபிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடுவது பலனற்றது. அதன் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்காது. எனவே எப்படி ஃபிரிட்ஜ் இல்லாமலேயே காய்கறி, பழங்களை ஃப்ரெஷாக பராமரிப்பது என்று பார்க்கலாம்.


வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகிய பொருட்களை குளிர்ச்சியான அல்லது காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிருங்கள்.


தக்காளி மூன்று அல்லது ஒரு வாரத்திற்கு வாங்குவதாக இருந்தால் கொஞ்சம் காயாக வாங்க வேண்டும். வெளியிலேயே வைக்க தினம் தினம் பழுக்கும் பழத்தை சமைக்க பயன்படுத்துங்கள்.


கருணைக்கிழங்கு, பீட்ரூட், சேனைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகளை கழுவிட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கலாம். காற்று புகுமாறு ஓட்டை போட்டு வையுங்கள்.


அனைத்து காய்கறிகளையும் ஒரே பையில் போட்டு வைக்கக் கூடாது. தனித்தனியாக பராமரிக்க வேண்டும்.


பச்சை மிளகாய், கத்தரிக்காய், முள்ளங்கி போன்ற காம்பு, இலை கொண்ட காய்கறிகளை அதன் தலையை வெட்டிவிட்டு சேமித்து வையுங்கள். முருங்கைக்காயையும் துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.


இஞ்சி நீண்ட நாட்கள் தாங்க மண்ணில் புதைத்து வைக்கலாம்.


வெண்டைக்காய், அவரக்காய், பீன்ஸ், குடை மிளகாய் போன்ற பச்சை நிறக் காய்கறிகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். அதிகபட்சமாக 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.


ஃபிரிட்ஜே தேவையில்லை என நினைத்தால் பாரம்பரிய முறையில் பானையில் காய்கறிகள் பழங்களை சேமித்து வைக்கலாம். அதாவது தரையில் மணலைப் பரப்பி அதன் மேல் பானையை வைத்து காய்கறிகளை அதற்குள் வைக்கலாம். கீழே உள்ள மணல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். இதற்கு அடிக்கடி மணலில் தண்ணீர் தெளியுங்கள். காற்றோட்டம் , வெயில் இருக்கக் கூடாது. இல்லையெனில் மணல் குளுமை போய்விடும்.




பழங்களை சேமிக்கும் வழிகள்..!


சிட்ரஸ் பழங்கள் ஒரு வாரம் வரை தாங்கக் கூடியது. எனவே ஆரஞ்ச், எலுமிச்சை , சாத்துக்கொடி போன்ற பழங்களை வெளியிலேயே இருட்டான இடத்தில் வைக்கலாம்.


அன்னாசி இலையை நீக்கிவிட்டு வையுங்கள்.


கொய்யா, ஆப்பில் போன்ற பழங்களையும் 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். நீர்ப் பழங்களை அன்றே சாப்பிட்டுவிடுவது நல்லது. சேமித்து வைக்க வேண்டாம்.


குறிப்பு : முடிந்த வரை அதிகமாக சேமித்து வைக்கும் பழக்கத்தை தவிர்த்துவிடுதல் நல்லது. குறைந்தது இரண்டு நாட்கள் சேமிக்கலாம். புதிதாக சந்தைக்கு வரும் காய்கறிகள், பழங்களை சுவைத்தலே ருசியும் ஆரோக்கியமும் கிடைக்கும்.


Comments