அயோடின் சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
அயோடின் குறைபாடு
கர்ப காலத்தில் பெண்கள் இரும்பு சத்து மற்றும் அயோடின் ஆகிய இரண்டையும் மிக கவனத்தோடு குறையில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும்தான் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக்கூடியது. குறிப்பாக அயோடின் சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
கர்ப்பிணிகளுக்கும் சோர்வின்றி சுறுசுறுப்பைத் தருவது அயோடின்தான். ஒருவேளை அயோடின் குறைபாடு நிகழ்ந்தால் என்னென்ன அறிகுறிகள் வரும் என்பதைக் காணலாம்.
அயோடின் குறைபாடு அறிகுறிகள் :
அயோடின் குறைந்தால் தைராய்டு பிரச்னை வரும். அடிக்கடி சோர்வு, உடல் எடைக் கூடுதல், வறண்ட சருமம், நகங்கள் உடைதல் போன்ற பிரச்னைகள் வரும்.
குழந்தைக்கு என்ன பாதிப்பு ?
அயோடின் சத்து குறைந்தால் குழந்தையின் மூளையை பாதிக்குமாம். இது குழந்தையின் மூளை வளர்ச்சியை தடை செய்யலாம். அதோடு இதன் பாதிப்பு குழந்தை பிறந்தாலும் நீடிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தை பிறந்த பிறகும் வளர்ச்சி சீராக இருக்காது என்று லைஃப் ஹெல்த் ஆன்லைன் இதழ் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக 14 - 16 வாரங்கள் வரை கருவில் உள்ள குழந்தை தாயின் தைராய்டு ஹார்மோனை நம்பிதான் இருக்குமாம்.
தாய்க்கு அயோடின் குறைந்தால் குழந்தைக்கு தைராய்டு பிரச்னை வரலாம்.சில நேரங்களில் அயோடின் குறைந்தால் கரு கலைதலும் நிகழலாம்.
தீர்வு :
அயோடின் குறையாமல் பார்த்துக்கொள்ள பால் , கீரை, மீன் போன்றவற்றை நன்கு சாப்பிடுவது அவசியம். உப்பு அயோடின் கலந்ததாக இருக்க வேண்டும்
Comments
Post a Comment