இந்த செயலியில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் உங்களை சுய பரிசோதனை செய்து பதிலளியுங்கள்.
MyJio கொரோனா ஆப்
கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில் மக்கள் கூட்டமாக தங்களுக்கும் தொற்று இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள மருத்துவமனைகளை நோக்கி விரைந்து வருகின்றனர்.
ஆனால், சாதாரண காய்ச்சல், ஜலதோஷம் உள்ளவர்களும் பரிசோதனைக்கு வருவதால் இதனது அழுத்தம் தொடர்ந்து உழைத்து வரும் மருத்துவத்துறையினரைக் கடுமையாகப் பாதிக்கிறது. இத்தகைய சூழலில் நமக்கான அறிகுறிகளைக் கொண்டு நமக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை அறிய ரிலையன்ஸ் MyJio ஆப் உதவுகிறது.
இதில் சிறப்பு என்னவென்றால் MyJio கொரோனாவைரஸ் அறிகுறி ஆப் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் உங்களை சுய பரிசோதனை செய்து பதிலளியுங்கள். உங்களது பாலினம், வயது, உங்கள் உடல்நல விவரங்கள் கேட்கப்படும். உதாரணமாக உங்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு, இருதய பாதிப்புகள், கர்ப்பிணியா என்பது போன்ற கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
அதன் பின்னர் கடந்த 14 நாட்களுக்குள் நீங்கள் ஏதேணும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தால் அதனது விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும். பின்னர் உங்களது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா, அவருடன் நீங்கள் கடந்த 14 நாட்களுள் தொடர்பில் இருந்தீர்களா போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
இதன் பின்னர் தற்போது உங்களுக்குக் காய்ச்சல், தலைவலி, இருமல், சளி, தொண்டை வலி, முச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதைக் குறிப்பிட வேண்டும். இதையடுத்து MyJio Coronavirus Symptom Checker tool நீங்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் விவரிக்கும்.
இந்த செயலியில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். தொடர்ந்து அரசின் அத்தனை அறிவிப்புகளும் அப்டேட் செய்யப்படும். நீங்கள் ஜியோ வாடிக்கையாளார் ஆக இல்லையென்றாலும் MyJio ஆப்-ஐ டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். கொரோனா தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் செயலியில் விடை கொடுக்கப்பட்டிருக்கும்.தேசிய அளவிலான ஹெல்ப்லைன் எண் (1075), மத்திய ஹெல்ப்லைன் எண் (+91-11-23978043), MyGov WhatsApp எண் (+91-9013151515), ஹெல்ப்லைன் ஈமெயில் முகவரி (ncov2019@gmail.com).
இந்த MyJio செயலியின் அப்டேடட் வெர்ஷன் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கத்துக்காக உள்ளது.
Comments
Post a Comment