திருமணம், ஐஸ்வர்யம், பதவி உயர்வு, மோட்சம் தரும் திருமால் ஸ்லோகங்கள்!



slogam


 மகாவிஷ்ணு மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் நாம் நினைத்த காரியங்களெல்லாம் நிறைவேற்றித் தருவார் பரந்தாமன்.


எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் வேண்டும் என்று விரும்புவதுதான் முக்கியமான ஆசையாக இருக்கமுடியும். அப்படி வாழ்வில், மதிப்பும் மரியாதையும் கவுரவமும் தந்தருளும் மகாவிஷ்ணுவின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.



எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். கவுரவம் உயரம். மரியாதை பெருகும்.
மதிப்பைத் தந்தருளும் ஸ்லோகம் :



ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநம:


முழுமையாக சிரத்தையுடன் செய்யும் காரியத்திலும் தடைகள் வந்து நம்மை இம்சை பண்ணும். அப்படி நம்மை மீறிய செயல்களிலும் வீர்யத்தைத் தந்தருளும் ஸ்லோகம் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்றித் தரும் ஸ்லோகம்.



ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன:


வாழ்வில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்பது திருமணமாகத்தான் இருக்கமுடியும். மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கலையே... மகளுக்கு நல்ல வரன் அமையலையே என்று கலங்கித் தவிக்கும் பெற்றோர்களின் வேதனை சொல்லிமாளாது. ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது.



காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு:


வாழ்வில் வேலை வேலை, உத்தியோகம் உத்தியோகம், சம்பளம் குடும்பம் என்றெல்லாம் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு கம்பீரமான உயர்ந்தபதவி கிடைப்பதற்குத்தானே எல்லோரும் இயங்கிக் கொண்டே இருக்கிறோம். அப்படிப் பதவி உயர்வைத் தரும்  மகாவிஷ்ணு ஸ்லோகம் இது:



வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:


செல்வம் தேவை. அது அழியாத செல்வமாக வளர்ந்திருக்கவேண்டும் என்பதுதான் எல்லோரின் வேண்டுதலும் பிரார்த்தனையும். அப்படி சம்பாதித்த செல்வத்தை அழியாத செல்வமாக்கும் அற்புத ஸ்லோகம் இது :



அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதந:


எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லையெனில் எதுவுமே இல்லாததாகத்தான் அர்த்தம். அப்படி எல்லா க்ஷேமமும் எப்போதும் கிடைக்கக் கூடிய மகாவிஷ்ணுவின் உன்னதமான ஸ்லோகம் இது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.



அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:



நம் வாழ்க்கையில் துன்பம் வருகிறதெனில், அந்தத் துன்பம் எப்போதோவொரு பிறவியில் செய்த வினையாகக் கூட இருக்கலாம். அப்படியான துன்பங்கள் ஏதும் நேராதிருக்க திருமாலை மனதாரப் பிரார்த்தனை செய்து வணங்கக் கூடிய ஸ்லோகம் இது :



பூசயோ பூஷணோ பூதிர்
விசோக: சோகநாசன:



மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தைச் சரணடைவதுதானே எல்லோரின் விருப்பமும் இறுதி ஆசையும். பரமபதம் கிடைக்கக் கூடிய ஸ்லோகம் இது :



சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண:

********************************************


Comments