தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை தரிசித்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்தியையெல்லாம் விரட்டுவார். உங்களை கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுத்து அருள்வார் பைரவர். எதிரிகள் தொல்லை என்பதே இல்லாமல் செய்வார். தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள். இன்று தேய்பிறை அஷ்டமி.
பொதுவாக, பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக் கொள்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தேய்பிறை அஷ்டமி நாளில், செவ்வரளி மாலை சார்த்தி, மிளகு அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.
கோயில் நடை திறந்திருந்தால், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள காலபைரவரைத் தரிசிக்கலாம். செவ்வரளி மாலை சார்த்தலாம். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்கி விநியோகிக்கலாம். ஆனால் தற்போதைய நிலையில், வீட்டில் விளக்கேற்றி, பைரவர் துதி பாராயணம் செய்யுங்கள். தெருநாய்களுக்கு பிஸ்கட்டோ உணவோ வழங்குங்கள்.
வெண்பொங்கல் நைவேத்தியமும் பைரவருக்கு சிறப்பு. முடிந்தால், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள். தீய சக்திகள் அனைத்தும் விலகிவிடும்.
தீராத நோயும் தீரும். ஆரோக்கியம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். கவலைகள் பறந்தோடும். தோஷங்கள் விலகும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எதிரிகள் பலமிழப்பார்கள்.
Comments
Post a Comment