’’இவ்வளவு தெய்வங்கள் ஏன்?’’ - காஞ்சி மகா பெரியவா விளக்கம்



maha-periyava


’ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா? இவ்வளவு மூர்த்திகள் எதற்கு ஸ்வாமி?’ என்று காஞ்சி மகா பெரியவாளிடம் ஒருமுறை கேட்டார்கள்.
அதற்கு, மகா பெரியவா இப்படியாக அருளினார் என்கிறது ‘தெய்வத்தின் குரல்’.
’’ நாம் சாப்பிடுகிறோம். வயிறு நிரம்புவதற்காகத்தானே சாப்பிடுகிறோம். எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை மாத்திரம் சாப்பிட்டால், வயிறு நிரம்பி விடுகிறது. அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்வது?
வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி. ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து அவரவரும் சாப்பிடுகிறார்கள்.
அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறார்கள். அப்படியே ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த மூர்த்தங்களைக் கொண்டு, தியானம் பண்ணுகிறார்கள். பிரார்த்தனை பண்ணிக்கொள்கிறார்கள்.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன.’’
இவ்வாறு மகா பெரியவா அருளினார்.


Comments