கும்பகோணம்
‘பாஸ்கர ஷேத்திரம்’ எனப் போற்றப்படும் கும்பகோணம் சக்கரபாணி கோயில் உற்சவருக்கு அரை கிலோ எடையிலான தங்கத்தால் செய்யப்பட்ட திருவடி நேற்று காணிக்கையாக வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகவத் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் அரை கிலோ எடையிலான தங்கத்தால் திருவடி செய்யப்பட்டது. இது நேற்று கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி முன்னதாக கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர், தங்கத் திருவடி உற்சவருக்கு அணிவிக்கப்பட்டது.
உற்சவருக்கு முதன் முதலாக தங்கத்தால் திருவடி செய்து வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உற்சவருக்கான கவசங்கள் உள்ளிட்டவை தங்கத்தால் செய்யப்பட்டு காணிக்கையாக வழங்கப்பட உள்ளன என அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.
Comments
Post a Comment