கஷ்டமும் நஷ்டமும் இனியில்லை; கடனில் இருந்து மீட்டெடுப்பார் காலபைரவர்!

bairavar


இந்தக் காலகட்டத்தில், நாய்கள் உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வேளையில், தெருநாய்களுக்கு உணவளியுங்கள். தீய சக்திகள் யாவும் ஓடிவிடும். கஷ்டங்களும் கடன் தொல்லையும் நீங்கும்.

பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசையை நோக்கி நகரும் நாட்கள் தேய்பிறை காலம் என்போம். இந்த தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதி என்பது பைரவருக்கானது என்கிறது புராணம். எனவே தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வழிபடுவது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது உறுதி.ஆனாலும் வளர்பிறை அஷ்டமி திதியிலும் வீட்டிலிருந்தே வழிபடச் சொல்லுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவாலயங்களில், பைரவருக்கு சந்நிதி இருக்கும். பொதுவாகவே, சந்நிதி என்று இல்லாமல், பைரவரின் திருவிக்கிரகம் மட்டுமே இருக்கும். இந்தநாளில் அருகில் உள்ள சிவாலயத்துக்கு மாலையில் சென்று, பைரவரைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.





திருப்பட்டூர் பிரம்மா முதலான ஒருசில கோயில்களில், ராகுகாலத்தின் போது பைரவ வழிபாடு செய்யப்படுகிறது. பெரும்பாலான ஆலயங்களில் காலையும் மாலையும் வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.


தொல்லை என்று கலங்குவோர், எந்தக் காரியம் செய்தாலும் தடையாக இருக்கிறதே எனப் புலம்புவோர், கடன் தொல்லையில் இருந்து மீளவே முடியவில்லையே என்று கண்ணீர் விடுவோர், தீய சக்திகளின் தாக்கம் இருப்பதாக வருந்துவோர்... மறக்காமல் பைரவரை நினைத்து பூஜிக்கலாம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்வதும் செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுவதும் மகத்துவம் வாய்ந்தது. ராகுகாலத்தில் இந்தப் பூஜைகளை மேற்கொள்வதும் நாய்களுக்கு உணவளிப்பதும் மகோன்னத பலன்களை வழங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

மேலும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் ஆதரவற்றோருக்கும் பக்தர்களுக்கும் விநியோகம் செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு உணவோ பிஸ்கட்டோ கொடுப்பது கூடுதல் பலன்களைத் தரும் என்பது உறுதி.

இந்தக் காலகட்டத்தில், நாய்கள் உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வேளையில், தெருநாய்களுக்கு உணவளியுங்கள். தீய சக்திகள் யாவும் ஓடிவிடும். கஷ்டங்களும் கடன் தொல்லையும் நீங்கும்.


Comments