காஞ்சி மகா பெரியவா, நடமாடும் தெய்வம். அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்த ஜோதி. தேதிப் பிராகாரம் இன்று காஞ்சி மகா பெரியவா முக்தி அடைந்த நாள்.
காஞ்சி மகான், எத்தனையோ தருணங்களில் பல சத்விஷயங்களை அருளியிருக்கிறார். காஞ்சி மகா பெரியவா நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளை, சின்னச்சின்ன உதாரணங்களுடன் எளிய பரிகாரங்களை ச் சொல்லியிருக்கிறார். நம் பிரச்சினைகளுக்கான அவரின் அருளுரைகளை ஏற்று நடப்போம்
காஞ்சி மகா பெரியவா, ’’தினமும் நாம் பல பிரச்சினைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். ’இறைவா, எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை’ என்று வாழ்க்கையில் கரையேறுவதற்கான வழி தெரியாமல், தடுமாறிக் கொண்டிருக்கிறோம். இந்த வார்த்தையைச் சொல்லாதவர்கள், உலகில் எவருமில்லை.
இருட்டில் கிடந்து அல்லாடும்போது ஒரு மெழுகுவத்தி வெளிச்சம் கிடைக்காதா என்கிற ஏக்கம் தான் அது. ஒரு மெழுகுவத்தி வெளிச்சம் கிடைத்ததும் நம்மைச் சுற்றி இருக்கும் இருள் விலகிவிடுகிறது. அப்படியொரு மெழுகுவத்தி வெளிச்சம், நம் எல்லோருக்கும் ஒருதருணத்தில், வாய்க்கும்.
இந்த அறையின் கதவு அங்கேதான் இருக்கிறதா என்று அந்த மெழுகுவத்தி வெளிச்சத்தில் நமது பிரச்சினைகள் ஓடி ஒளிந்துகொண்டிருக்கின்றன’’ என அருளியிருக்கிறார்.
Comments
Post a Comment