பாராயணம், ஜபம், தியானம்; காஞ்சி மகான் விளக்கம்


பாராயணம், ஜபம், தியானம்; காஞ்சி மகான் விளக்கம்


kanji-maghan



காஞ்சி மகா பெரியவாளிடம், அன்பர் ஒருவர், ’’இந்த அவசரயுகத்தில், பாராயணம், ஜபம், தியானம் போன்றவற்றை அனுஷ்டிக்க முடியவில்லையே ஸ்வாமி?’’ என்று கேட்டார்.
அதற்கு மகா பெரியவா, எல்லோருக்குமான அருளிய வார்த்தைகள், மிகமிகப் பொக்கிஷமானவை. காலத்துக்கும் பொருந்தக் கூடியவை.
அவர் அருளினார் இப்படி...
’’ இப்போது இருக்கும்படியான லோக வழியில், பாராயணம், ஜபம், தியானம் பற்றியெல்லாம் யோசிக்கச் சாவகாசம் இல்லை. மந்திரத் தியானமோ, ரூபத் தியானமோ பண்ணுவதற்கான அவகாசம் இல்லை. ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபிப்பது, ஒரு உருவத்தைத் தியானிப்பது என்ற பழக்கம் மனசுக்கு வருவது கொஞ்சம் சிரமம்.
தேவியினுடைய சரண கமலத்தை எப்போதும் உபாசித்தால், அவளுடைய கடாக்ஷத்தால் ஜனன நிவர்த்தி ஏற்படும். அதற்கு முதல்படி பாராயணம். அதற்கப்புறம் ஜபம். பின்பு தியானம் பண்ணுவது. அப்படித் தியானம் பண்ணும் போது, ‘பராசக்தி! இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் தருணத்தில் நான் உன்னையே தியானம் பண்ணிக் கொண்டிருக்கும்படியாக அநுக்ரஹம் செய்யவேணும்’ என்று பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்!’’
இவ்வாறு காஞ்சி மகா பெரியவா அருளினார் என ‘தெய்வத்தின் குரல்’ தெரிவிக்கிறது


Comments