அழகான சருமம் வேண்டுமா ? வைட்டமின் E சத்து நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!


காஸ்மெடிக்ஸ் இல்லாமல் உணவில் உள்ள வைட்டமின் E சத்தை நேரடியாகப் பெற்று இயற்கை வழியிலும் அழகைப் பாதுகாக்கலாம்.


அழகான சருமம் வேண்டுமா ? வைட்டமின் E சத்து நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!


வைட்டமின் E

ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் E சத்து மிகவும் அவசியம். நீங்கள் வாங்கும் காஸ்மெடிக்ஸிலும் வைட்டமின் E சத்து பயன்படுத்தப்பட்டிருப்பதற்கும் அதுதான் காரணம். சிலர் வைட்டமின் E எண்ணெய் காப்ஸ்யூலை நேரடியாக சருமத்தில் அப்ளை செய்து அழகை மீட்டெடுப்பார்கள். இவற்றிற்கு மாற்றாக உணவில் உள்ள வைட்டமின் E சத்தை நேரடியாகப் பெற்று இயற்கை வழியிலும் அழகைப் பாதுகாக்கலாம். எப்படி என்று பார்க்கலாம்.


பாதாம்: வைட்டமின் E சத்து நிறைந்தது. காற்று மாசுபாடு, கதிர்களின் தாக்கம் போன்றவற்றால் உண்டாகும் பாதிப்புகளை சரிசெய்ய உதவும்.


ஆலிவ் எண்ணெய் : சாலட் சாப்பிட்டாலோ, சமையலுக்கும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். இதில் ஆண்டி ஆக்ஸிடண்டும் உள்ளதால் உடலுக்கும், இதயத்திற்கும் ஆரோக்கியம். முகத்திலும் நேரடியாக அப்ளை செய்து மசாஜ் செய்யலாம்.


பசலைக் கீரை : சாலட் செய்து சாப்பிடும்போது பச்சையாக அப்படியே சாப்பிட்டால் அதில் உள்ள வைட்டமின் E நேரடியாகக் கிடைக்கும். சமைத்தும் சாப்பிடலாம்.


அவகோடா : வைட்டமின் E மட்டுமல்லாது வைட்டமின் C , பொட்டாசியம் ஆகியவையும் நிறைந்த பழம். எனவே ஜூஸ் குடிப்போர் இந்த பழத்திலும் ஜூஸ் போட்டு குடிக்கலாம்.


Comments